4-ஆம் தேதி ஆட்சி வந்ததும் ஒரே மாதத்தில்...அதிரடியாக அறிவித்த ராகுல் காந்தி
இந்திய கூட்டணி நடைபெறும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல்
மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்துள்ள இந்தியா கூட்டணி மத்தியில் தான் கடும் போட்டி நிலவுகிறது.
3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 13-ஆம் தேதி 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வீடியோ
அதில், தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை உணர்ந்திருக்கும் பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யக்கூடும் என மக்களுக்கு எச்சரிக்கை செய்து, மீண்டும் அவர் பிரதமராக வர மாட்டார் என உறுதிபட தெரிவித்தார்.
இன்னும் 4-5 நாட்களுக்கு நமது கவனத்தை திசைத் திரும்பும் முடிவினை அவர் எடுத்திருக்கலாம் என சுட்டிக்காட்டிய ராகுல், நாடகங்கள் அல்லது வேறு சில வேலைகளிலும் அவர் ஈடுபடலாம் என்றார். ஆனால் மக்கள் தங்களது கவனத்தை சிதறவிட கூடாது என உங்கள் கேட்டுக்கொண்ட ராகுல், தற்போது வேலைவாய்ப்பின்மை மிகவும் முக்கியான பிரச்சனையாக இருப்பதாக கூறினார்.
பிரதமர் மோடி 2 கோடி வேலைகள் வழங்குவேன் என்று சொன்னது பொய் என குற்றம்சாட்டி, பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி போன்றவற்றையே மக்களுக்கு பிரதமர் கொடுத்தார் என்றார். அதானி போன்றவர்களுக்கு தான் பிரதமர் வேலை செய்ததாக குறிப்பிட்ட ராகுல், தங்கள் கூட்டணி சார்பில் ‘பாரதி பரோசா திட்டத்தை’ கொண்டு வர உள்ளது அறிவித்தார்.
देश के युवाओं!
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2024
4 जून को INDIA की सरकार बनने जा रही है और हमारी गारंटी है कि 15 अगस्त तक हम 30 लाख रिक्त सरकारी पदों पर भर्ती का काम शुरू कर देंगे।
नरेंद्र मोदी के झूठे प्रचार से भटकना मत, अपने मुद्दों पर डटे रहना।
INDIA की सुनो,
नफ़रत नहीं, नौकरी चुनो। pic.twitter.com/C84xxSJvnc
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்து, அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து 30 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வேலையைத் தொடங்கும் என உறுதிபட தெரிவித்தார்.