மத்திய பிரதேச அரசியல் : பெரும்பான்மை யாருக்கு
மத்திய பிரதேசம் என்பது மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி மொழி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும்.
மத்திய பிரதேச மாநிலம்
1956இல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து மத்திய பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது, நவம்பர் 2000ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளைக் கொண்டு, சத்தீஸ்கர் எனும் புதிய மாநிலம் துவக்கப்பட்டது.
இம்மாநிலம் 230 சட்டமன்றத் தொகுதிகளும், இருபத்து ஒன்பது நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளும் கொண்டது இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘அடுத்த முதல்வர் கமல்நாத்’ என்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது இருந்து காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் இடையில் பனிப்போர் உச்சகட்டம் அடைந்தது.
கடந்த 2020 மார்ச் மாதம் சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து விலக கமல்நாத் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பின், ம.பி.யில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். காங்கிரஸில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறிய சிந்தியா, பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கிறார்.
கருத்து வேறுபாடு
இந்நிலையில், ம.பி. சட்டப்பேரவைப் பதவிக் காலம் 2024 ஜனவரி 6-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு நவம்பர் மாதம் ம.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ‘அடுத்த முதல்வர் கமல்நாத்’ என்ற கோஷத்தை அவரது ஆதரவாளர்கள் பரவலாக எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனாலும், காங்கிரஸார் சிலர் மெத்தனப்போக்கில் இருக்கிறார்கள். எப்படியும் இந்த தேர்தலிலும் பாஜகதான் வெற்றி பெறப் போகிறது.
இது காங்கிரஸாருக்கும் நன்றாகத் தெரியும். அவர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பு தருகிறோம். பாஜகவுடன் மெல்ல இணைந்துவிடுங்கள். இல்லையெனில், அடுத்து அமையும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு காங்கிரஸாரின் வீட்டுக்கு புல்டோசர் வரும் எனக் கூறியது பரபரப்பை ஏறபடுத்தியது