ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி.. மந்திரவாதியின் சதிச்செயலால் விபரீதம்!
குழந்தை முதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை கொலை செய்துள்ளான் மந்திரவாதி.
மர்மமான முறை
மகாராஷ்டிரா, சாங்லி மாவட்டத்திலுள்ள மஹைசலி பகுதியில் மாணிக் - போபட் சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களின் வீடுகள் ஒரே பகுதியில் இருக்கின்றன. கடந்த 20ஆம் தேதி அன்று இவர்களின் வீடுகள் மர்மமான முறையில் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் சாங்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ளவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
கடன்
ஒரு வீட்டில் மாலிக், அவரது தாய், மனைவி, இரு குழந்தைகள், இதேபோல் இன்னொரு வீட்டில் போபட் ,அவரது மனைவி, இரு குழந்தைகள் ஆகிய உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் வந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சகோதரர்களில் ஒருவர் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி இருக்கிறார் என்பதும், அதனை திருப்பி செலுத்த முடியாததால்தான்
திடீர் திருப்பம்
இந்த குடும்பத்தினரும் தற்கொலை செய்யும் முயற்சியை கையில் எடுத்து இருப்பதாக சொல்லி 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் போலீசார். இது தொடர்பாக 13 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் தான் சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் விஷம் வைத்துக்கொள்ளப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக தீரஜ் சந்திரகாந்த் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் இருவரையும் கைது செய்தனர் . அப்பாஸ் பிறந்த குடும்பத்தினரிடம் புதையல் இருப்பதாக சொல்லி அதை கண்டுபிடித்து தருகிறேன் என்று ஒரு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார்.
அதிர்வலை
சொன்னபடி புதையலை எடுத்து விட்டதால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்கள். அந்த வீர குடும்பத்தையே பழிவாங்க நினைத்த அப்பாஸ், கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று புதையல் கண்டுபிடிப்புக்காக சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று சொல்லி
ஒவ்வொருவராக மாடிக்கு வர வரவழைத்து சிறப்பு தீர்த்தம் என்று சொல்லி விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அம்மாவட்டத்தில் மாநிலத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
பானி பூரி விற்பனைக்கு அதிரடி தடை.. சோகத்தில் சாட் பிரியர்கள்!