தேடி சென்று கதை சொன்ன விஜய் மகன்; மறுத்த சூரி - ஷாக் ரீசன்!
விஜய் மகன் படத்தில் சூரி நடிக்கமுடியாது எனக் கூறி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் மகன் சஞ்சய் தற்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய், தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த பட பூஜையில் விஜய் கலந்துக்கொள்ளாதது சர்ச்சையை கிளப்பியது.
சூரி மறுப்பு
தற்போது முழு கதையையும் முடித்து விட்டு, தன்னுடைய படத்திற்கு ஹீரோவை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகர் சூரியை சந்தித்து தன்னுடைய கதையை சஞ்சய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு சூரி, "தம்பி உங்க கதை ரொம்ப அருமையா இருக்கு. கண்டிப்பா நீங்க சொன்னதை எடுத்தால் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இதுபோன்ற ஒரு மாஸ் கதையில் நான் ஹீரோவா நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த படத்திற்கு நான் பொருத்தமானவன் இல்லை எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil