விஜய் மகன் சஞ்சய் டைரக்டரா ஆகியிருக்கக் கூடாது - எஸ்.ஜே. சூர்யா பளிச்!

Vijay S.J.Suryah jason sanjay
By Sumathi Sep 02, 2023 05:30 PM GMT
Report

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநரானது குறித்து எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா 

எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான படங்கள் வாலி, குஷி இரண்டுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வியாபாரி, நியூ, இசை ஆகிய படங்கை இயக்கி அவரே நடிப்பில் களமிறங்கினார்.

விஜய் மகன் சஞ்சய் டைரக்டரா ஆகியிருக்கக் கூடாது - எஸ்.ஜே. சூர்யா பளிச்! | Sj Suryah About Vijay Son Jason Sanjay

தனது நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்டு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

ஜேசன் சஞ்சய்

தற்போது, வில்லனாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சஞ்சையை தான் ஹீரோவாக பார்க்கத்தான் ஆசைப்பட்டேன் என்றும் இயக்குநராக ஆவார் என்று நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

விஜய் மகன் சஞ்சய் டைரக்டரா ஆகியிருக்கக் கூடாது - எஸ்.ஜே. சூர்யா பளிச்! | Sj Suryah About Vijay Son Jason Sanjay

ஒருவேளை இப்போ இயக்குனராக அவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அமீர்கான் போல அவரும் ஒரு நாள் ஹீரோவாக மாறுவார் என்று நினைக்கிறேன்.

அமீர்கானும் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக வந்து அதன் பின்னர் இயக்குனராக மாறியவர்தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.