54 வயசாச்சு கல்யாணம் எப்போது? காதலிக்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா சொன்ன பதில்!
திருமணம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பதிலளித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான படங்கள் வாலி, குஷி இரண்டுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வியாபாரி, நியூ, இசை ஆகிய படங்கை இயக்கி அவரே நடிப்பில் களமிறங்கினார்.
தனது நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்டு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
திருமணம்?
தற்போது, வில்லனாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து எஸ்.ஜே. சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சினிமாவை தான் காதலிப்பதாகவும், படங்கள் தான் முக்கியம் என்பது போல் பதிலளித்துள்ளார்.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
