அவருடன் மீண்டும் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை - முன்னாள் கணவர் குறித்து சோனியா அகர்வால்!
முன்னாள் கணவர் செல்வராகவன் குறித்து சோனியா அகர்வால் மனம் திறந்துள்ளார்.
சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சமீப காலமாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதற்கிடையில், 'புதுப்பேட்டை 2' படத்தை இயக்க போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் 'புதுப்பேட்டை'. தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.
இவரது இயக்கத்தில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ள சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
புதுப்பேட்டை 2
எனவே, இரண்டாம் பாகத்தில் சோனியா அகர்வால், சினேகா நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், புதுப்பேட்டை படத்தை இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் கொண்டாடுவது சந்தோஷமாக உள்ளது.
நிச்சயமா இதற்கான கிரடிட் எல்லாம் செல்வாக்கு தான் போய் சேரனும். இந்த படத்துல நடிச்சது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
புதுப்பேட்டை 2 நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன். என்னோட தொழில் நடிப்பு. செல்வா கூட சேர்ந்து வேலை பார்க்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதுவரை புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்குறதுக்காக எந்த அழைப்பும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.