அவருக்காக காத்திருக்கிறேன் - 2வது திருமணம் குறித்து சோனியா அகர்வால் ஓபன் டாக்!

Sonia Agarwal Indian Actress Marriage
By Sumathi Jan 27, 2023 04:00 PM GMT
Report

சோனியா அகர்வால் இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் 'தமிழில் காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அவருக்காக காத்திருக்கிறேன் - 2வது திருமணம் குறித்து சோனியா அகர்வால் ஓபன் டாக்! | Sonia Agarwal Open Up Second Marriage

அப்போது அவருக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. இதனால் 2006-ம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

 2வது திருமணம்

இதனால் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சோனியா அகர்வால் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அத்துடன் அடிக்கடி பேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அவருக்காக காத்திருக்கிறேன் - 2வது திருமணம் குறித்து சோனியா அகர்வால் ஓபன் டாக்! | Sonia Agarwal Open Up Second Marriage

இந்நிலையில் தனது 2வது திருமணம் குறித்து பேசிய சோனியா அகர்வால், இன்னும் எத்தனை நாள், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பேன் என்பது எனக்கு தெரியவில்லை. சரியான நபரை நான் சந்திக்கும் போது அது நடக்கலாம்.

அவருக்காக நானும் காத்திருக்கிறேன். ஆனால், இப்போது வரை எனக்கான ஒருவரை நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.