அந்த விஷயம் நடக்காம போனதுக்கு காரணமே செல்வராகவன் குடும்பம் தான் - சோனியா அகர்வால் பளீச்!

Sonia Agarwal
By Sumathi Aug 22, 2023 05:30 PM GMT
Report

தான் நடிக்காதது குறித்து நடிகை சோனியா அகர்வால் மனம் திறந்துள்ளார்.

சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் 'தமிழில் காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அந்த விஷயம் நடக்காம போனதுக்கு காரணமே செல்வராகவன் குடும்பம் தான் - சோனியா அகர்வால் பளீச்! | Sonia Agarwal Opens About Acting After Marriage

அப்போது அவருக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. இதனால் 2006-ம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

திருமணம்

இந்நிலையில், அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “தனிப்பட்ட வாழ்க்கையில் இயக்குநர் செல்வராகவன் மிகவும் அமைதியான, பிஸியான நபர். எழுத்து மற்றும் அவருக்கான சொந்த உலகில் இருப்பார். அது ஒரு நல்ல உறவாக இருந்தது.

அந்த விஷயம் நடக்காம போனதுக்கு காரணமே செல்வராகவன் குடும்பம் தான் - சோனியா அகர்வால் பளீச்! | Sonia Agarwal Opens About Acting After Marriage

திருமணம் ஆனதால் என் தொழில் எதிர்பார்த்தபடி உயரவில்லை. திருமணத்திற்கு பிறகு நடிப்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. செல்வாவின் குடும்பத்தினரும் நான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால்தான் ஓய்வு எடுத்தேன். இரண்டு வருடங்கள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்கப்பட்டது. ஒரு நாள் குஷ்பு வந்தார். என் சீரியலில் உங்களால் நடிக்க முடியுமா என கேட்டார். அவர் செல்வாவிடமும் கேட்டார். அப்படி தான் நான் மெல்ல மெல்ல மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.