தாயுடன் உல்லாசமாக இருந்த காதலன் - ஆத்திரத்தில் மகன் செய்த செயல்!
தாயுடன் உல்லாசமாக இருந்த தொழிலாளியை மகன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
ஈரோடு, தொட்டாபுரம் வனப்பகுதியில் தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாக்கு மூட்டை ஒன்றில் துர்நாற்றம் வீசியுள்ளது.
உடனே தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீஸார், சாக்கு முட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. அதனை ஆய்வு செய்ததில் காணாமல் போன தொட்டாபுரம் கிராத்தைச் சேர்ந்த குமாருடையது என்று கண்டறியப்பட்டது.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நாகமல்லு என்பவர் தலமலை கிராம நிர்வாக அலுவலரிடம் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில், "நானும் என் அம்மா முத்துமணியும் தொட்டாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறோம்.
மகன் வெறிச்செயல்
எனது தந்தை ராமசாமி மதுக்கடையில் வேலை பார்த்து வருகிறார். எனது தம்பி சங்கர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். எனது அம்மாவுக்கும் குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமண உறவை மீறிய பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
இதுபற்றி குமாரை எச்சரித்தோம். ஆனால், தொடர்ந்து அவர்கள் உறவில் இருந்து வந்தனர். கடந்த மே 27ம் தேதி நான் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வரும் போது குமாரும், எனது அம்மாவும் தனிமையில் இந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தேன். குமாரை கயிற்றால் கட்டி வைத்து காலையில் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தேன்.
ஆனால், குமார் தொடர்ந்து என்னை தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தார். ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியால் தலையில் அடித்தேன். இதில் குமார் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைக்க என் பெரியப்பா மகன் மாதேவனை துணைக்கு அழைத்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டினோம்.
வனப்பகுதியில் உடலை வீசிவிட்டால் வனவிலங்குகள் தின்று விடும் என நினைத்து உடலை அடர்ந்த வனப்பகுதியில் வீசி விட்டு வந்து விட்டேம். பின்னர் யாரும் எங்களை கண்டு பிடிக்கவில்லை என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், போலீசாரிடம் மாட்டி விடிவிடுவோம் என நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தோம்"எனத் தெரிவித்துள்ளார்.