தகாத உறவு; விவாகரத்து செய்பவர்களுக்கு இனி வேலை இல்லை - நிறுவனம் எச்சரிக்கை!
விவாகரத்து, தகாத உறவில் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகாத உறவு
சீனா, ஷெஜியாங் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊழியர்கள் அனைவரும் கள்ள உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, திருமணம் தாண்டிய உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, விவாகரத்து செய்யக்கூடாது.
இதை மீறி விவாகரத்து செய்வோர், திருமணம் தாண்டிய உறவு வைத்துக்கொள்வோர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஊழியர்களின் குடும்பங்களில் அன்பையும், விசுவாசத்தையும் ஒரு கார்ப்பரேட் கலாச்சாரமாக ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நிறுவனம் எச்சரிக்கை
இதனை ஒரு விதிமுறையாகவே கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களும் குடும்பத்தில் தங்கள் துணையுடன் நல்ல நடத்தையைத் பின்பற்றி, நல்ல ஊழியர்களாக இருக்க முயற்சிப்பார்கள் என்று தங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அந்த ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தச் செய்தி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.