ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர் - பகீர் சம்பவம்
ராணுவ வீரர் ஒருவர் ஓடும் ரெயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராணுவ வீரர் செயல்
டெல்லியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சத்தீஷ்கார் மாநிலம் சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு பெண், தன்னுடைய 7 வயது குழந்தையுடன் ஏசி கோச்சில் பயணம் செய்துள்ளார்.
தாயும், மகளும் கீழ் அடுக்கு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மேல் படுக்கையில் ராணுவ வீரர் ஒருவர் படுத்திருந்துள்ளார். இந்நிலையில், மேல் படுக்கையில் இருந்து கீழே தண்ணீர் வழிந்துள்ளது.
பெண் புகார்
இதனால் அந்தப்பெண் எழுந்து பார்க்கையில், ராணுவ வீரர் உடை நனைந்துள்ளது. அதன்பின் அவர் போதையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. உடனே அதிர்ச்சியடைந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அதனையடுத்து தனது கணவருக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீஸார், ராணுவ வீரர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
எனவே, அந்த பெண் ஆன்லைனின் பிரதமர் அலுவலகத்திற்கும், ரயில்வே அமைச்சருக்கும் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.