கணவன் வாங்கிய கடன்; தலித் பெண்ணை ஆடையின்றி தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்!
தலித் பெண்ணை தாக்கி, வாயில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் விவகாரம்
பீகார், மோசிம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது தலித் பெண். இவரது கணவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரமோத் சிங் என்ற கந்து வட்டிக்கு கடன் அளிக்கும் நபரிடம் சிறுதொகையை கடனாக பெற்றுள்ளார்.
தொடர்ந்து, அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்திவிட்டதாக தலித் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ரூ1500 வட்டி நிலுவையில் இருப்பதாகவும், அதனை உடனடியாக திருப்பி செலுத்துமாறும் பிரமோத் சிங் மிரட்டி வந்துள்ளார்.
பகீர் சம்பவம்
மேலும், பிரமோத் சிங், அவரது மகன் அன்சு குமார் மற்றும் 4 ஆண்கள், தலித் பெண்ணின் வீடு புகுந்து அவரை அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர். நிர்வாணப்படுத்தியும் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.
பெண்ணின் வாயில் அன்சு குமார் சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறார். இதற்கிடையில் இவரை காணாமல் குடும்பத்தினர் தேடியுள்ளனர். பின் ஆடையின்றி மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம குறித்து அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள பிரமோத் சிங் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
அதனையடுத்து, பாதுகாப்புக்காக அந்த கிராமத்தில் போலீஸார் முகாமிட்டுள்ளனர்.