ரயிலில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் - அடித்து உதைத்த சக பயணிகள்
ரயிலில் கணவருடன் பயணம் செய்த பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்த நிலையில் சக பயணிகள் அடித்து உதைத்தனர்.
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்
லக்னோவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்ற அகல் தக்த் எக்ஸ்பிரஸ் (AKAL TAKHAT EXPRESS) ரயிலில் தம்பதியினர் பயணம் செய்தனர்.
கணவர் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி ரயிலில் நள்ளிரவு அசந்து துாங்கிக் கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் சிறுநீர் கழித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த பெண் கூச்சலிடவே ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் விழித்தனர். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை அடித்து உதைத்தனர்.
கைது செய்த ரயில்வே போலீஸ்
இதையடுத்து ரயில் காவல்துறையினருக்கு தம்பதியினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரயில்வே காவல் அதிகாரி சஞ்சீவ் குமார் சின்ஹா உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை சார்பாக் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் பயணியின் மீது சிறுநீர் கழித்தது தெரியவந்துள்ளது.