ருத்ராட்சத்தை விட சக்தி வாய்ந்தது பாம்பு தோல் -ஏன் தெரியுமா?
மருத்துவ உலகில் பாம்பு தோல் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பாம்பு
தோலை உரிக்கும் நிகழ்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்றே! ஏன் நமது தோல் கூட உரியும் தான். அப்படி தான் பாம்பு தோலை உரிக்கும் நிகழ்வும் பொதுவானது. பாம்பின் உடலைச் சுற்றி உட்தோல், வெளித்தோல் என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன.
உட்தோல் மென்மையாக இருக்கும். வெளித்தோல் கெரட்டின் என்ற பொருளால் தடிமனாக உருவாகியிருக்கும். பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும்போது காயம் அடைந்துவிடாமல் இந்தத் தோல் சட்டை பாதுகாக்கிறது. வெளித்தோல் நாளுக்கு நாள் கெட்டியாகும். 70-90 நாட்களில் தடித்த வெளித்தோலால் பாம்புக்குப் பார்வை சக்தியே குறைந்துவிடும்.
பூஜை அறை
அதனால் இந்தத் தோல் சட்டையை பாம்பு உரித்துவிடுகிறது. மேலும் மருத்துவ உலகில் பாம்பு தோல் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பாம்பு சட்டை பல கிராம வீடு தோட்டத்தில் கிடைப்பது உண்டு. நம்மில் சிலர் அவற்றை பத்திரமாக பூஜை அறைக்குள் வைத்து பாது காப்பதுண்டு..இதனால் என்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்து மத நம்பிக்கையின் பாம்பின் தோலை பார்த்தால் பணத்திற்கு பஞ்சம் வராது என்று சொல்லப்படுகிறது.
இதனால் இந்த பாம்பு தோலை வீட்டில் வைப்பதன் மூலம் நிதி நிலை உயரும் என்றும், சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த பாம்பு தோல் ருத்ராட்சத்தை விட சக்தி வாய்ந்ததாகவும் பலரால் நம்பப்படுகிறது.