பாம்பு ஒயின், சிலந்தி காக்டெய்ல் - மது பிரியர்களை தள்ளாட வைக்கும் தகவல்!
உலகின் 5 விசித்திரமான பானங்களைப் பற்றிய தகவல்.
விசித்திர பானங்கள்
உலகில் டீ, காபி, ஜூஸ், குளிர் பானங்கள், மது போன்றவற்றை தினம்தோறும் அருந்துவோர் ஏராளம். இந்த பானங்கள் தற்போது மிகவும் பொதுவானதாகிவிட்டன. இந்நிலையில் உலகில் உள்ள 5 விசித்திரமான பானங்களைப் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
இவற்றில் சில பானங்கள் மிகவும் விநோதமானவை. அவற்றைப் பற்றி தெரிந்த பிறகு, நீங்கள் அதை குடிக்க விரும்பமாட்டீர்கள். அந்தவகையில் உலகின் 5 விசித்திரமான பானங்களைப் பற்றி பார்க்கலாம்.
குழந்தைகள் பீர்
ஜப்பானில் காய்ச்சப்படுகிறது இந்த பீர் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் இந்த குழந்தைகள் பீர் மது கிடையாது. இதில் சுவாரஸ்யமான என்னவென்றால், இந்த பீரின் தோற்றம், நுரை என அனைத்தும் நிஜ பீர் போலவே இருக்கும். இதை குழந்தைகள் குடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எறும்பு ஜின்
ஆஸ்திரேலியாவில் இந்த மதுபானம் எறும்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக ஆஸ்திரேலிய மக்கள் பழங்காலத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மதுவின் கீழே இருக்கும் எறும்புகளை மக்கள் மென்று சாப்பிடுகிறார்கள்.
தொப்புள் பீர்
உங்கள் தொப்புளில் சில நேரங்களில் அழுக்குகள் சேருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பொதுவாக அனைவரும் அதை விரல்களால் அகற்றுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதே போன்று தொப்புளிலிருந்து வரும் கழிவுகளை கலந்து பீர் தயாரிக்கப்படுகிறது. இந்த பீர் மதுபானத்தை அந்நாட்டில் உள்ள '7 செஞ்சுரி ப்ரூவரி' நிறுவனம் தயாரிக்கிறது.
அரகோக்
மெக்சிகோவில் அரகோக் எனப்படும் சிறப்பு வகை காக்டெய்ல் உள்ளது. இது சிலந்தி விஷம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனை குடிப்பதால் நாக்கு மரத்துப்போகும் என்று ஒடிடிடி சென்ட்ரல் நியூஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பு ஒயின்
அட்லஸ் அப்ஸ்குரா இணையதளத்தின் படி, பாம்பு ஒயின் பொதுவான திராட்சை விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு பாட்டிலில் விஷப் பாம்பையும் காணலாம். இந்த மதுவில் பாம்புகள் வைக்கப்பட்டு நொதித்த பிறகு குடிக்கப்படுகிறது.
டெட் பிட் வைப்பர் வகை பாம்புகள் மது பாட்டில்களில் வைக்கப்பட்டு பின்னர் மதுவை நிரப்பி மாதக்கணக்கில் பதப்படுத்தப்படும். இந்த மதுபானம் சீனா மற்றும் வியட்நாமிலும் அதிகம் அருந்தப்படுகிறது.