ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் - விமானத்தில் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த இருக்கை தொடர்பாக பயணி ஒருவர் பதிவிட்ட பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
உடைந்த இருக்கை
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். ஆனால் அவர் விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே அதனை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியிலிருந்து பெங்களூருக்கு சென்ற போது ஜன்னலோர இருக்கைகக்காக கூடுதலாக ரூ.1,000-ம் செலுத்தினேன்.
நடவடிக்கை
ஆனால் அதன் பிறகு எனது இருக்கை உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அவருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதில் "ஏமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து உங்கள் முன்பதிவு விபரங்களை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். சரிபார்த்து உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Paid extra 1k for a broken window seat (22A) on Air India AI512 from DEL to BLR on 4th Apr. They called the engineer to fix it, but he couldn't. Is this what I paid the flight fare for? Can't I atleast expect a proper seat after paying so much? @airindia @DGCAIndia @Ministry_CA pic.twitter.com/j2vxlcRbnt
— Name cannot be blank (@Kaijee04) April 6, 2024