நடிகை ராஷ்மிகா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Cinema Rashmika Mandanna Indian Actress Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 18, 2024 10:00 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

நடிகை ராஷ்மிக

இந்திய திரையுலகில் கன்னட, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் ராஷ்மிக மந்தனா. கடந்த மாதம் இவரின் ‛டீப் ஃபேக்' வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை ராஷ்மிகா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Rashmika Mandanna Flights Technical Snag

இதனால் சில நாட்கள் மன உளைச்சலில் இருந்த ராஷ்மிகா, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் , அவர் பயணித்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதும், அதிலிருந்து அவர் பத்திரமாக தப்பியது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

தொழில்நுட்ப கோளாறு

மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் பயணித்தனர். மும்பை விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Rashmika Mandanna Flights Technical Snag

இதனை கவனித்த விமானி உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதனால் விமானத்தில் பயணித்த நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரின் நண்பர் ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.