விஜய்யுடன் பிரபல நடிகை டேட்டிங், காதல்? உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்!
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் முடிந்த பாடில்லை.
நடிகை ராஷ்மிகா
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை.
காதல்?
இந்நிலையில் விஜய் மற்றும் ராஷ்மிகா டேட்டிங்கில்தான் இருக்கிறார்கள் என உறுதிப்படுத்தும் வகையில் ரசிகர்கள் ஆதாரத்தை பதிவிட்டு வருகின்றனர். தீபாவளி கொண்டாடிய விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா அவரவர் போட்டோக்களை பதிவிட்டிருந்தார்கள்.
இருவரும் குடும்பத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடியதாக போட்டோவை இணைத்து பார்த்து வைரலாக்கி வருகின்றனர். ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். அப்பட புரோமஷன் நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீர், ராஷ்மிகா மற்றும் இயக்குநர் கலந்துக்கொண்டனர்.
அப்போது, ராஷ்மிகாவை, விஜய் தேவரகொண்டாவுக்கு கால் செய்யும்படி பாலைய்யா கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கால் செய்ததில் விஜய், What' up rey என கேட்டுள்ளார். உடனே ராஷ்மிகா வெட்கப்பட்டு சிரித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காதல் உறுதிதான் என பதிவுகளை குவித்து வருகின்றனர்.
You May Like This Video