ஒரே வீட்டில் லிவிங்கில் இருக்கும் விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா? - புகைப்படத்தால் பிடிபட்ட பிரபலங்கள்!

Vijay Deverakonda Rashmika Mandanna Tamil Actors Tamil Actress
By Vinothini Sep 07, 2023 07:29 AM GMT
Report

நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஒரே வீட்டில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபலங்கள்

நடிகர் விஜய்தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர். இவரைப்போல் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பிரபலாமானவர். இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் மற்றும் டியர் காமரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

rashmika-and-vijay-deverakonda-in-same-house

அந்த சமயத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தது, மேலும் இவர்கள் இருவரும் லிவிங்கில் இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சர்ச்சைகள் எதற்கும் இருவரும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றனர்.

வைரல் புகைப்படம்

இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வந்தது. அதில் அவரது புகைப்படம் ஒன்றையும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றையும் ரசிகர்கள் இணைத்து வைத்து வெளியிட்டுள்ளார்.

rashmika-and-vijay-deverakonda-in-same-house

இருவரும் தனித்தனியாக வெளியிட்ட புகைப்படத்தில் இருவர் பின்னரும் இருக்கும் சுவர் மற்றும் கார்டன் ஒரே வீடு போல் உள்ளது ரசிகர்களை ஆச்சரியத்திற்குள்ளாகியது. அதுமட்டுமின்றி, விஜய் தேவரகொண்ட தனது இன்ஸ்டாகிராமில், ”நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே ஸ்பெஷல். விரைவில் அறிவிக்கிறேன்” என போஸ்ட் செய்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

rashmika-and-vijay-deverakonda-in-same-house

அதில் இவர் ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போல புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. குஷி ரிலீஸ் சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால், பலரும் இவர் சமந்தாவை காதலிப்பதாக கூறினர். ஆனால் அது ராஷ்மிகா தான் என்று சந்தேகம் எழுந்துள்ளது.