மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா - அதுவும் குறைவான போட்டிகளில்!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது 6-வது ஒருநாள் சதம் விளாசினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் தனது 7-வது சத்தத்தை விளாசியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
அதிக ரன்கள்
மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம் மற்றும் 64 அரைசதங்கள் அடித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் அவர் 6-வது இடத்தில் உள்ளார். 27 வயதான ஸ்மிருதி மந்தனா இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.