'டொக்..டொக்'னு ஆடிட்டே இருக்க முடியாது; கோலி-ரோஹித் மாதிரி.. விளாசிய சீக்கா!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
பாபர் அசாம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் படுதோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.
மேலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 3 போட்டிகளில் 91 ரன்களை 104.65 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீகாந்த்
இந்நிலையில் பாபர் அசாம் குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் "டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் விளையாட வேண்டாம் என்று நான் நினைக்கவில்லை.
டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் 'டொக்.. டொக்' என ஆடிக்கொண்டே இருக்க முடியாது. விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மா போல பாபர் அசாம் 4000 ரன்கள் அடித்துள்ளதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 112 - 115. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்று கூறியுள்ளார்.