T20 World Cup : அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல் - டாப் 15-ல் கூட ஒரு இந்திய வீரர் இல்லை!
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 போட்டிகள் மட்டும் மீதம் உள்ளது.
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-ல் உள்ள 4 மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
1. ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - 3 போட்டிகள் - 167 ரன்கள்
2. மார்க்ஸ் ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா) - 3 போட்டிகள் - 156 ரன்கள்
3. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - 4 போட்டிகள் - 148 ரன்கள்
4. ஆரோன் ஜோன்ஸ் (அமெரிக்கா) - 3 போட்டிகள் - 141 ரன்கள்
5. பிரண்டன் மெக்முல்லன் (ஸ்காட்லாந்து) - 3 போட்டிகள் - 140 ரன்கள்
6. ஜார்ஜ் முன்சி (ஸ்காட்லாந்து) - 4 போட்டிகள் - 124 ரன்கள்
7. பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 4 போட்டிகள் - 122 ரன்கள்
8. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 4 போட்டிகள் - 116 ரன்கள்
9. இப்ராஹிம் சத்ரான் (ஆப்கானிஸ்தான்) - 3 போட்டிகள் - 114 ரன்கள்
10. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 4 போட்டிகள் - 110 ரன்கள்
இந்திய வீரர்கள்
இந்த பட்டியிலில் முதல் 15 இடங்களில் கூட ஒரு இந்திய பேட்ஸ்மேன் இடம்பெறவில்லை. இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 3 போட்டிகளில் 100 ரன்களை தாண்டி ரன் குவிக்கவில்லை.
இந்திய வீரர் ரிஷப் பண்ட் 17-வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் 3 போட்டிகளில் விளையாடி 96 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் ஷர்மா 68 ரங்களுடன் 34-வது இடத்தில் இருக்கிறார்.