ஜெயிச்சா மட்டும் போதாது.. இது நடந்தாலே சூப்பர் 8 சுற்று காலி - சிக்கலில் பாகிஸ்தான்!

Cricket Pakistan Pakistan national cricket team Sports T20 World Cup 2024
By Jiyath Jun 12, 2024 11:23 AM GMT
Report

மழை காரணமாக போட்டிகள் ரத்தானால் பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாது.

பாகிஸ்தான் அணி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, அடுத்த சுற்றுக்கு செல்ல போராடி வருகிறது.

ஜெயிச்சா மட்டும் போதாது.. இது நடந்தாலே சூப்பர் 8 சுற்று காலி - சிக்கலில் பாகிஸ்தான்! | T20 World Cup Pakistan Super 8 Qualification

முன்னதாக அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் அந்த அணி தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து கனடாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் அமெரிக்க அணியை வீழ்த்த வேண்டும். அதேபோல் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

பாகிஸ்தானை பார்த்து வாயைப் பொத்தி சிரித்த கோலி, ரோஹித் - ஏன் தெரியுமா?

பாகிஸ்தானை பார்த்து வாயைப் பொத்தி சிரித்த கோலி, ரோஹித் - ஏன் தெரியுமா?

மழை வந்தால்...

இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். மேலும், மழை காரணமாக போட்டி ரத்தானாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது.

ஜெயிச்சா மட்டும் போதாது.. இது நடந்தாலே சூப்பர் 8 சுற்று காலி - சிக்கலில் பாகிஸ்தான்! | T20 World Cup Pakistan Super 8 Qualification

ஒருவேளை இன்று நடைபெறும் இந்தியா - அமெரிக்கா இடையேயான போட்டி மழையால் ரத்தாகி, இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றால், அமெரிக்க அணி 5 புள்ளிகள் பெற்று இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.

இதேபோல் வரும் பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டியும் மழை காரணமாக ரத்தானாலும், பாகிஸ்தானால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியாது. இதனால் மழை பெய்யக் கூடாது என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.