விராட் கோலி - பாபர் அசாம்.. செருப்புக்கு கூட சமமாக மாட்டார் - விளாசிய வீரர்!

Virat Kohli Pakistan India Babar Azam T20 World Cup 2024
By Jiyath Jun 10, 2024 02:06 PM GMT
Report

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பேசியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

விராட் கோலி - பாபர் அசாம்.. செருப்புக்கு கூட சமமாக மாட்டார் - விளாசிய வீரர்! | Ind Vs Pak Danish Kaneria Slams Babar Azam

இதனையடுத்து 120 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த தொடரில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான அணி தோற்றது. தற்போது இந்தியாவிடமும் தோற்றதால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அதிருப்தியடைந்தனர்.

2 ஆண்டுகள்.. விராட் கோலிக்காக அல்லாவிடம் துவா செய்த பாக். வீரர் - ஏன் தெரியுமா?

2 ஆண்டுகள்.. விராட் கோலிக்காக அல்லாவிடம் துவா செய்த பாக். வீரர் - ஏன் தெரியுமா?

விளாசிய வீரர் 

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா "பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு நாள் சதம் அடித்தால் அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவதை நாம் பார்க்கலாம்.

விராட் கோலி - பாபர் அசாம்.. செருப்புக்கு கூட சமமாக மாட்டார் - விளாசிய வீரர்! | Ind Vs Pak Danish Kaneria Slams Babar Azam

ஆனால், அவர் விராட் கோலியின் செருப்புக்கு கூட சமமாக மாட்டார்" என்றார். மேலும், அமெரிக்க அணிக்கு எதிராக பாபர் அசாம் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது குறித்து பேசிய அவர் "பாபர் அசாமை அமெரிக்க பவுலர்கள் ரன் குவிக்க விடாமல் செய்தார்கள். அவரால் அந்த பவுலர்களுக்கு எதிராக கூட சரியாக விளையாட முடியவில்லை.

சரியாக 40 ரன்கள் எடுத்தவுடன் அவர் ஆட்டம் இழந்தார். அந்த போட்டியில் அவர் கடைசி வரை நின்று வெற்றி தேடித் தந்திருக்க வேண்டும். அந்த போட்டியில் பாகிஸ்தான் ஒருதலை பட்சமாக வெற்றிபெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.