2 ஆண்டுகள்.. விராட் கோலிக்காக அல்லாவிடம் துவா செய்த பாக். வீரர் - ஏன் தெரியுமா?

Virat Kohli Pakistan India Indian Cricket Team T20 World Cup 2024
By Jiyath Jun 09, 2024 12:48 PM GMT
Report

விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் அலி பேசியுள்ளார். 

விராட் கோலி 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை எதிர்பார்த்து இருதரப்பு ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

2 ஆண்டுகள்.. விராட் கோலிக்காக அல்லாவிடம் துவா செய்த பாக். வீரர் - ஏன் தெரியுமா? | Pak Cricketer Azhar Ali About Ind Virat Kohli

இந்நிலையில் இந்திய வீரர் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் அலி பேசியுள்ளார். அவர் கூறியதாவது "விராட் கோலி ஒரு மாஸ் வீரர். அவர் சில நாட்களுக்கு முன்பு ஃபார்ம் இல்லாமல் தவித்தார்.

நல்ல வீரர் தான்.. இறங்கிப்போய் பேசியும் கேட்கல; அதனால் நீக்கி விட்டேன் - எம்எஸ் தோனி பளீச்!

நல்ல வீரர் தான்.. இறங்கிப்போய் பேசியும் கேட்கல; அதனால் நீக்கி விட்டேன் - எம்எஸ் தோனி பளீச்!

புகழாரம் 

அப்போது அவருக்காக அல்லாவிடம் பிரார்த்தனை செய்தேன். விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டும் என்று 2 ஆண்டுகளாக அல்லாவிடம் துவா செய்தேன். ஏன் இதை செய்தேன் என்று எனக்கு தெரியாது.

2 ஆண்டுகள்.. விராட் கோலிக்காக அல்லாவிடம் துவா செய்த பாக். வீரர் - ஏன் தெரியுமா? | Pak Cricketer Azhar Ali About Ind Virat Kohli

சரியாக விளையாடவில்லை என பலரும் அவரை விமர்சிக்கலாம். ஆனால், இந்த பணியை 15 ஆண்டுகளாக அவர் செய்து கொண்டிருக்கிறார் மறக்காதீர்கள். சரிவிலிருந்து தற்போது விராட் கோலி மீண்டு வந்துள்ளார். அப்படி இதுவரை மீண்டு வந்ததை நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.