ஏமாற்று வேலை; பாகிஸ்தான் வீரர் செய்த செயல் - அமெரிக்க வீரர் பரபரப்பு புகார்!

Cricket Pakistan national cricket team T20 World Cup 2024
By Sumathi Jun 07, 2024 10:56 AM GMT
Report

ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக ரஷ்டி தெரான் புகார் அளித்துள்ளார்.

PAK vs USA 

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. அதில் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

pakistan cricket team

இந்நிலையில் போட்டிக்குப் பின், முன்னாள் அமெரிக்க வீரர் ரஷ்டி தெரான் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், போட்டியின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் தன் நகத்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும்,

உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கா? - நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி

உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கா? - நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி

ரஷ்டி தெரான் புகார்

அதன் மூலம் அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் சமூக ஊடகத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்டுள்ளார்.

ஹாரிஸ் ரவுஃப்

தற்போது இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஆனால், இது குறித்து வீடியோவாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.