வீட்டிற்குள் விழுந்த விமானம்; ஏராளமானோர் பலி? பதறவைக்கும் வீடியோ!
விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
விமான விபத்து
அமெரிக்கா, ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் சிறிய ரக விமானங்களை சொந்தமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகள் நேர்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ட்ரெய்லர் பார்க் பகுதியில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட பீச் கிராஃப்ட் பொனன்சா வி 35 ரக விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதிகளின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
ஷாக் வீடியோ
தொடர்ந்து, ப்பிடித்து எரிந்ததால் தீ வேகமாக அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டனர். இதனிடையே விமானம் விழுந்ததும் தீ பற்றிய போது, பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
We’re on scene of a small plane crash at a mobile home park south of Clearwater Mall. Multiple mobile homes have caught fire. Firefighters from multiple jurisdictions are on scene. pic.twitter.com/1vBLnTnY8R
— Clearwater Fire & Rescue Department (@clearwaterfire) February 2, 2024
இதுவரை 10க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ள நிலையில், 3 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த உடல்களும் கிடைக்காத நிலையில், பின்னரே அதுகுறித்த தகவல் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.