மணப்பாறை அருகே கோர விபத்து...தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து அப்பளம் போல் நொறுங்கிய கார் - 5 பேர் உயிரிழப்பு

Tamil nadu Tiruchirappalli
By Thahir Jun 25, 2023 12:03 PM GMT
Report

மணப்பாறை அடுத்த கல்கொத்தனுாரில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு 

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது மணப்பாறை அருகே கல்கொத்தனுார் என்ற இடத்தில் பேருந்து வந்த போது எதிரே கார் ஒன்று வந்துள்ளது.

5 killed in Manaparai accident

பின்னர் எதிர்பாரதவிதமாக காரும், பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

5 killed in Manaparai accident

காரும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

5 killed in Manaparai accident

கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.