கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் - 7 பேர் மாயம், ஒருவர் பலி!
ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
விமான விபத்து
அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தது டில்ட்ரோட்டர் விமானம். ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும் செயல்படக்கூடியது. இதில், 8 பேர் பயணித்துள்ளனர். அப்போது தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ரோந்து படகு மற்றும் விமானம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக, கோஷிமா விமான நிலையத்திற்கு,
ஒருவர் பலி
விமானம் அவசரகால தரையிறக்கம் செய்வதற்கான அழைப்பு ஒன்று அமெரிக்க ராணுவத்திடம் இருந்து சென்றுள்ளது. ஆனால், அது அமெரிக்க கடற்படை அல்லது விமான படையிடம் இருந்து வந்த கோரிக்கையா? என்பது குறித்து அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் மாயமாகியுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.