சின்ன வெங்காயம் விலையை கவனிச்சீங்களா? மக்கள் கண்ணீர்!
சின்ன வெங்காயம் விலை உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்..
சின்ன வெங்காயம்
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமது செய்யப்படுகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விதித்திருந்த நிலையில், சமீபத்தில் தடை நீக்கப்பட்டது.
மேலும், ஏற்றுமதிக்கு சின்ன வெங்காயத்திற்கு 40 சதவீதம் வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் வெங்காய விலை உச்சத்தில் உள்ளது. இதனால், டன் கணக்கில் வெங்காயத்தை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விலை உயர்வு
தற்போது, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தொடர்ந்து, சின்ன வெங்காயத்திற்கான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன வெங்காயத்திற்கும், பெரிய வெங்காயத்திற்கும், விலை முதல் விளைச்சல் வரை பல வேறுபாடுகள் இருக்கும்போது, இரண்டையும் ஒரே நிலைப்பாட்டில் வைத்து வெங்காய ஏற்றுமதிக்கு ஒரே எண்ணை மத்திய அரசு வழங்கியிருப்பதால், இதனையும் மாற்றியமைக்க வேண்டியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.