நறுக்காமலே கண்ணீர் வரும் போல...ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200-க்கு விற்பனை..!

Tomato Spring Onion Chennai
By Thahir Jul 12, 2023 03:10 AM GMT
Report

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு

கடந்த சில நாட்களாகவே, தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளி விலை நாளுக்கு நாள் ஏற்றம் கன்டு வருகிறது.

இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, நியாய விலை கடைகளில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

200 per kg of spring onions

இந்நிலையில் இன்றைய வரத்துபடி, தக்காளி விலையானது சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ 10 ரூபாய் உயர்ந்து, மொத்த விற்பனை கிலோ 110 ரூபாய் என்றும், சில்லறை விற்பனை 130 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி கிலோ 260 ரூபாய்க்கும், பூண்டு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.