தொடர்ந்து எகிறும் வெங்காயத்தின் விலை.. எப்போது குறையும்?
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்து வருகிறது.
விலை உயர்வு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தினசரி உணவில் பயன்படுத்தும் காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது. அதில் தக்காளி 200, பச்சை மிளகாய் 160, சின்ன வெங்காயம் 160 முதல் 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இவற்றின் விலை கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில், தற்பொழுது சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர துவங்கியுள்ளது.
வெங்காய விலை
இந்நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 25 ரூபாய்க்கும் புதுக்கோட்டை மாவட்ட உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இனிவரும் காலங்களில் இதேபோல் வரத்து குறைந்தால் இன்னும் சற்று விலை ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.