காவிரி விவகாரம்...எப்போதும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் - அமைச்சர் உதயநிதி உறுதி!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் தனது உரிமையை விட்டு கொடுக்காது என தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுகவின் சார்பாக மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் துவங்கிவைக்கப்பட்டது.
அடுத்த 18 நாட்களுக்கு இந்த மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம்
அதிக நிதி ஒதுக்கப்பட்டும் குஜராத் மாநிலம் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த பதக்கங்களையும் வெல்லாததை பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது, இது போன்ற பாரபட்சத்தை தவிர்க்கவே தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது போன்ற செயல்களுக்கு தமிழக, இந்திய மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் பாஜக போராட்டம் அறிவித்துள்ளதை பற்றி வினவிய போது, சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அவை மேற்கொள்ளப்படும் என்றும் எப்போதும் தமிழகத்தின் உரிமையை இந்த விவகாரத்தில் விட்டு கொடுக்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.