பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு - சொந்த தொகுதியில் நிகழ்ந்த சோகம்!

Narendra Modi Uttar Pradesh
By Karthikraja Jun 19, 2024 12:09 PM GMT
Report

 பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட காணொளி வெளியாகி உள்ளது.

வாரணாசி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடி 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

narendra modi pm oath 3rd time

இந்நிலையில் 3 வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தன் சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று (18.06.2024) வருகை தந்தார். 

அர்ஜுன் சம்பத் மீது செருப்பு வீச்சு... ஓட ஓட விரட்டிய வழக்கறிஞர்கள் - பரபரப்பு வீடியோ காட்சிகள்

அர்ஜுன் சம்பத் மீது செருப்பு வீச்சு... ஓட ஓட விரட்டிய வழக்கறிஞர்கள் - பரபரப்பு வீடியோ காட்சிகள்

நரேந்திர மோடி

அங்கு நடைபெற்ற விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இத்திட்டத்தின் 17-வது தவணைத் தொகையை 9.26 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் மோடி விடுவித்தார்.  

modi speech in varanasi

மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தம்மைத் தேர்வு செய்ததற்காக அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில் காரில் செல்லும் போது சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்று வரவேற்கிறார்கள். எதிர்பாராதவிதமாக செருப்பு ஒன்று மோடி கார் மீது வந்து விழுகிறது. மோடியின் காரில் நின்றுகொண்டுள்ள பாதுகாவலர் அந்த செருப்பை அப்புறப்படுத்துகிறார். 


தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.