அர்ஜுன் சம்பத் மீது செருப்பு வீச்சு... ஓட ஓட விரட்டிய வழக்கறிஞர்கள் - பரபரப்பு வீடியோ காட்சிகள்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை வழக்கறிஞர்கள் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு
டிசம்பர் 6ம் தேதியான நேற்று அம்பத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு, ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் விசிக கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த அர்ஜுன் சம்பத் மீது செருப்பும் வீசப்பட்டது.
இதுகுறித்து அர்ஜூன் சம்பத், அம்பேத்கருக்கு காவி நிறம் அணிவித்தது இவர்களை கோபப்படுத்துகிறது என்றால் இத்தனை நாளாக இவர்கள் அம்பேத்கர் என்ற மாமேதையை சாதி எனும் கூண்டில் அடைத்து வைத்தது சரியா? அம்பேத்கர் முகமூடி மாட்டிக்கொண்டு சாதி அரசியல் செய்துவரும் கூட்டத்தின் முகத்திரையை கிழிப்போம்! என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இரு பிரிவினர் இடையே பகைமையை உண்டாக்கும் வகையில் ட்விட் செய்ததாக அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முன்னராக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற அர்ஜுன் சம்பத்தை வழக்கறிஞர்கள் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கரை இழிவு செய்ததாக
— RAMJI (@newsreporterra1) December 6, 2022
சென்னை உயர்நீதிமன்ற அவளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக் முயன்ற அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்திய வழக்கறிஞர்கள்... pic.twitter.com/ZN1uSeUtEe