இந்தியாவில் நேற்றை விட இன்று சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நேர்றைவிட சற்று குறைந்துள்ளது.
சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 17,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,413 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாடுமுழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 74 லட்சத்து 71 ஆயிரத்து 41 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் 15 கோடி சொத்துக்கள் முடக்கம் - வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி..!