சசிகலாவின் 15 கோடி சொத்துக்கள் முடக்கம் - வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி..!

V. K. Sasikala Chennai
By Thahir Jul 01, 2022 05:13 AM GMT
Report

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளன.

வருமான வரித்துறையினர் சோதனை 

கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது.

அதில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பலகோடி சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது.

சசிகலாவின் 15 கோடி சொத்துக்கள் முடக்கம் - வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி..! | 15 Crore Assets Of Sasikala Are Frozen

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை சரிபார்த்து, சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சொத்துக்கள் முடக்கம் 

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.1600 கோடி சொத்துக்களையும், அடுத்தபடியாக ரூ.300 கோடி சொத்துக்களையும் முடக்கியது.

கடைசியாக ரூ.2,000 கோடி மதிப்பிலான அவரது பங்களாவையும் முடக்கினர். தொடர்ந்து ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில்,

சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வருகிறார் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு..!