சென்னை வருகிறார் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு..!
தமிழகம் வரும் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
குடியரசு தலைவர் தேர்தல்
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதையடுத்து வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
சென்னை வருகை
அந்த வகையில் நாளை சென்னை வரும் திரௌபதி முர்மு அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
அவர் தனியார் விடுதியில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.