சென்னை அணிக்கு மீண்டும் திரும்பும் இளம் வீரர் - அப்ப கோப்பை நமக்குதான்...!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் அணியை கட்டமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மீண்டும் மோசமான முறையில் வெளியேறியுள்ளது. அந்த அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த சீசன் தொடங்குவதற்கு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது தலைமையிலான அணி தொடர் தோல்வியில் சிக்கி தவித்து வெளியேறும் நிலையில் இருந்த போது மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் நிலைமை கையைவிட்டு சென்ற பின்னர் தோனியால் கூட சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.
இதனால் அடுத்தாண்டுக்கான அணியை கட்டமைக்கும் பணியில் இப்போதே சென்னை அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. அதன்படி அடுத்த சீசனில் தோனி, பிராவோ இருவரும் விளையாட மாட்டார்கள் என கூறப்படுவதால் மினி ஏலம் அல்லது ட்ராஃப்ட் முறையில் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை தேர்வு செய்யலாம். அவ்வாறு டிராஃப்ட் முறையில் வீரர்கள் தேர்வு நடந்தால், அதில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கை மட்டும் தான் ஓங்கும்.
சென்னை அணிக்கு இருக்கும் ஒரு நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது தான் முக்கிய பிரச்சினை ஆகும். இதேபோல் நடுவரிசையில் பேட்டிங்கில் அதிரடி காட்டவும் மற்ற அணி போல் ஒரு இளம் வீரர் தேவை என்பதால் கடந்த 2 சீசன்களாக சென்னை அணியில் விளையாடாத சாம் கரணை களமிறக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் தோனி இல்லை என்றால் அந்த இடத்திற்கு வரப்போவது தினேஷ் பானா தான் என்பதால் தற்போதே சென்னை அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.