ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 30 பேர் உயிரிழப்பு - மீண்டும் அதிகரிக்கும் தொற்று..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்து 14 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்னர் என்றும், 30 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றல் நாடு முழுவதும் 99 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் 4 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 5 லட்சத்து 25 ஆயிரத்து 77 பேர் தொற்றல் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 197 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 138 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்க செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.