மீண்டும் இந்தியாவில் 3 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு : மத்திய சுகாதாரத்துறை தகவல்

COVID-19
By Irumporai Apr 27, 2022 04:27 AM GMT
Report

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகாமாகியுள்ளது ,அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்கொரோனா பாதிப்பு நாளில் 2,483 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் ஆக 2,927 ஆக அதிகரித்துள்ளது .

என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,65,496 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 1399 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆக குறைந்துள்ளது.

இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,23,654 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 2252 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,25,563 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,279 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,88,19,40,971 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 21,97,082 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.