வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷன் - வெளியான புகைப்படங்கள்!

Indian Railways
By Sumathi Sep 02, 2024 05:28 AM GMT
Report

 புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவில் வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

vande bharath sleeper

தொடர்ந்து, படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர் வந்தே பாரத், வந்தே பாரத் மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ஆகிய ரயில்கள் மூலம் நாட்டின் ரயில் சேவை மேம்படும்.

வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷன் - வெளியான புகைப்படங்கள்! | Sleeper Coach Version Vande Bharat Train

ஸ்லீப்பர் வெர்ஷன்

மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்கள்படி அனைத்து ரயில்களையும் நாங்கள் மேம்படுத்துவோம். அம்ரித்பாரத் ரயில்களில் இருவர் பயணிக்கும் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. படுக்கைகளுக்கு இடையேயுள்ள சங்கிலிக்கு பதிலாக புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷன் - வெளியான புகைப்படங்கள்! | Sleeper Coach Version Vande Bharat Train

கழிவறைகள் மேம்படுத்தப்படுகின்றன. ரயில் டிரைவர் கேபினிலும் கழிவறைகள் அமைக்கப்படவுள்ளன. இன்னும் 3 மாதத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.   

வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷன் - வெளியான புகைப்படங்கள்! | Sleeper Coach Version Vande Bharat Train

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்; ரயில் கட்டணம் இதுதான்.. இதோ முழு விவரம்!

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்; ரயில் கட்டணம் இதுதான்.. இதோ முழு விவரம்!