சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்; ரயில் கட்டணம் இதுதான்.. இதோ முழு விவரம்!
சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
வந்தே பாரத்
சென்னை - நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கிடையில் இந்த ரயில் இயக்கப்படும் நேரம், வழித்தடம் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும். தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு சென்று சேரும். 2 நிமிடங்கள் தாம்பரத்தில் நிற்கும் இந்த ரயில் 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் (6.52/6.55 - வரும் நேரம் / புறப்படும் நேரம்) , திருச்சி (8.55 / 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55), மதுரை (10.38 / 10.40), கோவில் பட்டி (11.35 / 11.37), நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர் கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும்.
[YUYBPU2
சென்னை - நாகர்கோவில்
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லை (3.18/3.20), கோவில் பட்டி (3.58/4.00), மதுரை (5.03/5.05), திண்டுக்கல் (5.48/5.50), திருச்சி (6.45/6.50), விழுப்புரம் (8.53/8.55), தாம்பரம் (10.28/10.30) வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டுள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (சேர்கார் கட்டணம் - ரூ.1760), (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3240) சென்னை எழும்பூர் - நெல்லை (சே.க - ரூ.1665), (எ.சே.க - ரூ.3055) எழும்பூர் - கோவில்பட்டி (சே.க - ரூ.1350) - (எ.சே.க. - ரூ.2620) எழும்பூர் - மதுரை (சே.க - ரூ.1,200) - (எ.சே.க. - ரூ.2,295) எழும்பூர் - திண்டுக்கல் (சே.க - ரூ.1105) - (எ.சே.க. - ரூ.2110) எழும்பூர் - திருச்சி (சே.க - ரூ.955) - (எ.சே.க. - ரூ.1790) எழும்பூர் - விழுப்புரம் (சே.க - ரூ.545) - (எ.சே.க. - ரூ.1,055) எழும்பூர் - தாம்பரம் (சே.க - ரூ.380) - (எ.சே.க. - ரூ.705)
நாகர்கோவில் - எழும்பூர் (சே.க - ரூ.1735) - (எ.சே.க. - ரூ.3220) நாகர்கோவில் - தாம்பரம் (சே.க - ரூ.1700) - (எ.சே.க. - ரூ.3175) நாகர்கோவில் - விழுப்புரம் (சே.க - ரூ.1510) - (எ.சே.க. - ரூ.2775) நாகர்கோவில் - திருச்சி (சே.க - ரூ.1000) - (எ.சே.க. - ரூ.1945) நாகர்கோவில் - திண்டுக்கல் (சே.க - ரூ.850) - (எ.சே.க. - ரூ.1635) நாகர்கோவில் - மதுரை (சே.க - ரூ.1735) - (எ.சே.க. - ரூ.1405) நாகர்கோவில் - கோவில்பட்டி (சே.க - ரூ.515) - (எ.சே.க. - ரூ.985) நாகர்கோவில் - நெல்லை (சே.க - ரூ.440) - (எ.சே.க. - ரூ.830) உணவுடன் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.