ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலி - நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Karnataka Death
By Sumathi Apr 22, 2024 03:45 AM GMT
Report

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

6 பேர் பலி

கர்நாடகா, ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் நசீர் அகமது (40), அல்சியா அகமது (10), மொகின் அகமது (6), ரேஷா உன்னிசா (38), இப்ரா அகமது (15), அபித் அகமது (12). இவர்கள் உட்பட 8 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

karnataka

அதன்படி, தண்டேலிக்கு சென்ற குடும்பத்தினர் காளி ஆற்றுக்கு சென்று, தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.

கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி : சென்னையில் பகீர் சம்பவம்

கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி : சென்னையில் பகீர் சம்பவம்

தீவிர விசாரணை

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றதில் முடியவில்லை. உடனே, தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சடலங்களை மீட்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலி - நெஞ்சை உலுக்கும் சம்பவம்! | Six Members Of A Family Drown In Water Karnataka

தொடர்ந்து 2 பேரை தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.