கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி : சென்னையில் பகீர் சம்பவம்
சென்னை மூவர்சம்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
குளத்தில் மூழ்கி பலி
பங்குனி உத்திர நாளை முன்னிட்டு சென்னை மூவரசம்பட்டு பகுதி கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. அப்போது குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி 5 தன்னார்வல இளைஞர்கள் உயிரிழந்தனர்.அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பரசன் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் நிவாரணம்
இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த தன்னார்வல இளைஞர்கள் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சம்பவம் நடைபெற்ற சென்னை மூவரசம்பட்டு குளத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். பலியான இந்த 5 பேரும் இ கோவில் அர்ச்சகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது