பட்டாசு ஆலை வெடி விபத்து;10 பேர் உயிரிழப்பு - தொழிற்சாலை உரிமம் ரத்து !
வெட்டி விபத்தில் 10 பேர் உயிரிழந்த பட்டாசு தொழிற்சாலை உரிமம் ரத்து.
வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் அமைந்திருக்கும் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி 10க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது.
பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். முதல் கட்டமாக விஜயகுமார், ரமேஷ், காளீஸ்வரன், முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி ஆகிய 6 பேர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் உடல் கருகி இறந்த 3 பெண்களின் அடையாளம் தெரியாமல் இருந்தது.
உரிமம் ரத்து
இதையடுத்து, உறவினர்களின் உதவியோடு 3 பெண்களை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.