இதற்காகத்தான் சிவகார்த்திகேயனை திருமணம் செய்தேன் - மனைவி ஆர்த்தி கலகல!
சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கூறியுள்ள கலகல தகவல் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன்
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தைத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்,மான் கராத்தே,கா்ககிச்சட்டை,லிஃப்ட் உள்ளிட்ட 5 திரைப்படங்களை தயாரித்து பாடல்களையும் பாடியுள்ளார். தொடர்ந்து, தனது மாமா மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
மனைவி தகவல்
இவர்களுக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். தற்போது, இசையமைப்பாளர் இமான், சிவா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பேசிய தகவல் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் பணிபுரியும் போது தனது மனைவி ஆர்த்தியிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். அதில் எதற்காக தன்னை திருமணம் செய்தீர்கள் என்ற கேள்விக்கு ஆர்த்தி நீங்கள் பேசுறது நல்லா டைம் பாஸ் ஆகும் எனக் கூறினார்.
அதற்கு சிவா பார்த்தீர்களா டைம் பாஸ்க்காக கல்யாணம் பண்ணியிருக்காங்க என கலகலப்பாய் கூறியது ரசிகர்களை ஈர்த்துள்ளது.