என் குடும்பத்தையும் பேசுவாங்க; Ignore பண்ணுங்க அதான் வெற்றி - நடிகர் சிவகார்த்திகேயன்!
விமர்சனங்கள் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதை அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
டி இமான்-சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனையடுத்து, தனது முதல் மனைவி மோனிகாவை, இமான் விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையவாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதன், நானும் இமானும் பிரியக்கூடாது என்றுதான் அவர் நினைத்தார்" என்று தெரிவித்தார். ஆனாலும் இணையவாசிகள் குற்றச்சாட்டுகளுடன் சிவகார்த்திகேயனை கடுமையாக தாக்கி வருகின்றனர்.
ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நேர்காணலில் விமர்சனங்கள் குறித்து பேசியதை அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது "இப்பல்லாம் என்னை கிண்டல் பண்ணினாலோ, தவராக தேவையில்லாம பேசினாலோ அதைப்பத்தி பெருசா கவலைபடமாட்டேன்.
என்னை பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்காங்க. குறிப்பா என்னை பற்றி மட்டும் பேசாமல் என் குடும்பத்தை பற்றியும் பேசுவாங்க. ஆனால் அதைவிட அதிகமா நான் 'நல்லா இருக்கணும்னு' நினைக்கிறவங்க இருக்காங்க. நல்லதை மட்டும் எடுத்துப்போமே.
விமர்சனங்களுக்கு உடனே நாம் ரியாக்ட் (react) பண்றதுதான், நம்ம மேல விமர்சனம் வைப்பவர்களுக்கு வெற்றி. ஆனால் அதை இக்னோர் (ignore) பண்ணுங்க அதான் நம்மளோட வெற்றி" என்று சிவகார்த்திகேயன் பேசியிருப்பார். இதனை இப்போது சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் "இக்னோர் நெகட்டிவிட்டி" (ignore negativity) என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
You are Gem💎 Na❤ @Siva_Kartikeyan
— Pradeepan (@iam_pradeepan) October 19, 2023
Negativity tha fast ah Spread aagum😌😤!
Don't react with these stupids who spread Negativity 😌!!! Always stand with you Na❤💥.... #Ayalaan #Sivakarthikeyan pic.twitter.com/AtjXujWR5o