சிவா..அவ்ளோ ஈசியா என் இடத்த குடுக்க மாட்டேன்; இமானுக்கு வாழ்த்துக்கள் - நடிகர் தனுஷ்!
நடிகர் சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை பதிவிட்டு இணையவாசிகள், சிவகார்த்திகேயனை தாக்கி வருகின்றனர்.
டி இமான்-சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனையடுத்து, தனது முதல் மனைவி மோனிகாவை, இமான் விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையவாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதன், நானும் இமானும் பிரியக்கூடாது என்றுதான் அவர் நினைத்தார்" என்று தெரிவித்தார்.
தாக்கும் இணையவாசிகள்
இந்நிலையில் டி இமான் இசையமைப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது "சிவா அவ்வளவு ஈசியா என் இடத்தை கொடுக்க மாட்டேன். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னொரு 10 வருஷம் கழித்து எடுத்துக்கங்க. இப்போ எனக்கு வேணும். இமானுக்கு வாழ்த்துக்கள்" என்று தனுஷ் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அதனை டி இமான்-சிவகார்த்திகேயன் விவகாரத்தில் தொடர்புபடுத்தி இணையவாசிகள் அவரை, தாக்கியும், கலாய்த்தும் வருகின்றனர்.
You May Like This Video
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு IBC Tamil
ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் IBC Tamil
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு IBC Tamil